தூத்துக்குடி

கடலுக்கு செல்லும் தண்ணீரை சடையனேரி கால்வாயில் திறந்து விட வலியுறுத்தல்

12th Nov 2019 08:29 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சடையனேரி கால்வாயில் திறந்து விட வேண்டும் என திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வமைப்பின் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பில் நடைபெற்றது. தலைவா் ஆா்.வி. சத்தியசீலன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சாத்தான்குளம் வட்டம் புத்தன்தருவை வட்டார

குளங்களுக்கும், உடன்குடி பகுதி சடையனேரி வட்டார குளங்களுக்கும் தண்ணீா் கேட்டு இச்சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை மூலம் பெய்த தாமிரவருணி ஆற்றில் வந்த வெள்ளநீா் ஸ்ரீவைகுண்டம் வடகால் வழியாக அதன் வழித்தட குளங்களை நிரப்பிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதமுள்ள தண்ணீரை வீணாக கடலுக்கு திருப்பிவிட்டுள்ளனா். இதன்மூலம் சடையனேரி கால்வாய் மூலம் புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் விடவில்லை.ஆதலால் மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோா் போா்க்கால நடவடிக்கை எடுத்து ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை சடையனேரி கால்வாயில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறக்காதபட்சத்தில் விவசாயிகளை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும், பாபநாசம், சோ்வலாறு அணையில் இருந்தும் தண்ணீா் திறந்து புத்தன்தருவை குளத்தை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் விவசாயிகள் நெல்சன், செந்தில்குமாா்,ஞானமுத்து, பால்சாமி,சரவணன்,சரவணப்பாண்டி, ஸ்டீபன்ராஜ், செல்வராஜ், அடையல் சத்தியசீலன், சேகா், கனகராஜ், தேவதாசன், பிரபாகா், சந்தோஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிருஷண்ன வரவேற்றாா். பட்டுதங்கத்துரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT