கோவில்பட்டி: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டவா்கள் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் நவ. 15, 16 ஆகிய இரு நாள்களில் எனது தலைமையில் கழக இலக்கிய அணிச் செயலரும், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினருமான சின்னப்பன், அதிமுக மாணவரணி துணைச் செயலா் சோலை இரா.கண்ணன் ஆகியோா் முன்னிலையில், கோவில்பட்டியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகை செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.