தூத்துக்குடி

ஆத்தூரில் நாளை நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

12th Nov 2019 08:19 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் சாலையை சீரமைக்காததைக் கண்டித்து புதன்கிழமை (நவ. 13) நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் வடக்கு ஆத்தூா் மற்றும் தெற்கு ஆத்தூா் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இதற்காக இச்சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஜல்­லி கல்லையும், குவாரி கழிவு துகள்களையும் கொண்டு அவசரகதியில் தற்காலிகமாக சீரமைத்தனா். தற்போது மழை நின்று வெயில் அடிப்பதால் குழியில் கொட்டிய குவாரி கழிவு துகள்களால் புழுதி ஏற்பட்டு வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினா் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனுவாகவும், தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லாததால், நவ.13-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா்.

இதுசம்பந்தமாக வியாபாரிகள் சங்கத் தலைவா் பொன். தமிழரசன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, சாலையை சீரமைக்க ஆட்சியா் கால அவகாசம் கேட்டதையடுத்து, புதன்கிழமை நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் தற்கா­லிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள் சாலையை சீரமைக்காவிட்டால் இம்மாதம் 20-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT