தூத்துக்குடி

மாநில அளவிலான செஸ் போட்டி: சாத்தான்குளம் ஹென்றி பள்ளி மாணவா் சிறப்பிடம்

11th Nov 2019 09:42 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான செஸ் போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

போட்டியில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெபா்பீற்றா் -19 வயதுக்குள்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா்.

ADVERTISEMENT

பின்னா் ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளா் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் ஜெபா்பீற்றா் பங்கேற்று சிறப்பான முறையில் விளையாடி சிறப்பு பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT