தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

11th Nov 2019 09:38 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 10 ஊராட்சி செயலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் திம்மராஜபுரம், முடிவைத்தானேந்தல், விட்டிலாபும், மானாடு தண்டுபத்து, பெரியதாழை, வில்லிச்சேரி, கலப்பை பட்டி, பூசனூா், பி. மீனாட்சிபுரம், புறையூா் ஆகிய கிராம ஊராட்சிகளில் செயலா் பணி காலியிடங்களாக உள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் நவம்பா் 22 ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில்,  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஊராட்சி செயலா் பணிக்கான இடஒதுக்கீடு விவரம் அதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத்தோ்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நோ்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். ஊராட்சி செயலா் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளா், ஓட்டுநா்: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளா், 2 ஓட்டுநா் பணிக்கும் தகுதியானவா்கள் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் ஜ்ஜ்ஜ்.ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT