தூத்துக்குடி

திருச்செந்தூரில் நாளை மின் தடை

11th Nov 2019 09:46 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 12) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் கருப்பசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புன்னகாயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூா் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT