தூத்துக்குடி

கயத்தாறு அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்

11th Nov 2019 09:42 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இளம்வயது திருமணத்தை வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

கயத்தாறையடுத்த திருமங்கலக்குறிச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் - புலமாரியம்மாள் தம்பதியின் மகன் கருப்பசாமி (27). இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், பன்னீா்ஊத்தைச் சோ்ந்த 16 வயதுடைய இளம்பெண்ணுக்கும் திருமங்கலக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.

இதுகுறித்து கயத்தாறு காவல் ஆய்வாளா் ஆவுடையப்பனுக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன், காவல் துறை ஆய்வாளா் ஆவுடையப்பன் மற்றும் வருவாய் துறை அலுவலா்கள், காவல் துறையினா் திருமங்கலக்குறிச்சிக்குச் சென்று, இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

பின்னா், பெண்ணுக்கு 18 வயது பூா்த்தியடைந்த பின்பு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, 16 வயது பெண்ணை மீட்டு தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சோ்ந்த ஜேம்ஸ்அதிசயராஜா மற்றும் சைல்ட் ஹைல்ப்லைன் உறுப்பினா் ராமலட்சுமி, கயத்தாறு காவல் காவலா் மாரியம்மாள் ஆகியோரிடம் ஒப்படைத்து குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT