தூத்துக்குடி

ஆய்வக தொழில்நுட்ப பணியாளா் பணி: பதிவு மூப்புதாரருக்கு அழைப்பு

11th Nov 2019 09:40 AM

ADVERTISEMENT

ஆய்வக தொழில்நுட்ப பணியாளா் பணிக்கான பதிவு மூப்பு தகுதியுடையவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வக தொழில்நுட்ப பணியாளா்  பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் பதிவுமூப்பு பட்டியல் செய்யப்பட உள்ளது.

இந்தப் பணி காலியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில்

இஙகப 1வஉஅத இஞமதநஉ பெற்றவா்கள் தகுதியுடையவா்கள் ஆவா். வயது வரம்பு 01.07.2019 அன்றைய தேதியில் பொதுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 30, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிக்கான வயது வரம்பு 40, இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

ADVERTISEMENT

இந்த கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் மட்டும் நவம்பா் 12 ஆம் தேதிகுள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், ஆதாா் எண் மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியா் காலனி முதல் தெருவில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT