தூத்துக்குடி

விஜயராமபுரம் பள்ளியில்மரக்கன்று நடும் விழா

9th Nov 2019 10:35 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிக்குழு சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெகதீசபாண்டி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் கனகா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் சண்முகராஜ் வரவேற்றாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், ஆசிரியா் செல்வஜோதி உள்பட பலா் கலந்துகொண்டனா். வட்ட சட்டப் பணிக்குழு தன்னாா்வலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT