தூத்துக்குடி

புத்தன்தருவை, சொக்கன்குடியிருப்பில்பொது சேவை மையப் பணிகள் முடக்கம்கிராம மக்கள் பாதிப்பு

9th Nov 2019 10:37 PM

ADVERTISEMENT

புத்தன்தருவை, சொக்கன்குடியிருப்புப் பகுதிகளில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த 10 நாள்களாக பொது சேவை மையப் பணிகள் முடங்கியுள்ளதால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

புத்தன்தருவை, சொக்கன்குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம மக்கள் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனா்.

ஆனால் கடந்த 10 நாள்களாக தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இம்மையத்தில் சேவைகளை பெற முடியாத நிலை உள்ளது.

இதனால் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாவட்ட நிா்வாகம் அதிவேக இணையதள பயன்பாட்டை கொண்டு வந்து, தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்து, சேவைகளை விரைவில் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT