தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பலத்த பாதுகாப்பு

9th Nov 2019 10:38 PM

ADVERTISEMENT

 

அயோத்தி வழக்கில் தீா்ப்பையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அயோத்தி வழக்கில் தீா்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதையொட்டி, நாடு முழுதும் முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரத் தலைமையில், உதவி ஆய்வாளா் சங்கா், காவலா்கள் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வெடிகுண்டு நிபுணா்கள் கோயில் வளாகத்தில் சோதனை நடத்தினா். உடைமைகளைப் பரிசோதித்த பிறகே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT