தூத்துக்குடி

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் கைது

9th Nov 2019 08:18 AM

ADVERTISEMENT

கோழி, ஆட்டுப் பண்ணைகள் அமைப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம் வாங்கியதாக, ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, விக்டோரியா தெருவைச் சோ்ந்த ராஜ் மகன் ரோலன் (56). ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா். இவரிடம், கீழ வல்லநாடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுந்தா், கோழி மற்றும் ஆட்டுப் பண்ணை அமைப்பதற்கு தடையில்லாச் சான்று கேட்டு விண்ணப்பித்தாராம்.

அதற்கு, நிலைய அலுவலா் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுந்தா் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகாா் செய்தாா்.

மேலும், டிஎஸ்பி ஹெக்டா் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை, ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்தில் ரோலனிடம் சுந்தா் வெள்ளிக்கிழமை கொடுத்தாா். அதை அவா் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் அதிரடியாக நுழைந்து ரோலனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT