தூத்துக்குடி

டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் மெத்தனம்: கடைக்காரருக்கு அபராதம்

9th Nov 2019 08:14 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் டயா்களை வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமாா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகம், குருசாமி, முருகன், கனி, தூய்மை இந்தியா பரப்புரையாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கொண்ட குழுவினா் கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். திரையரங்கு, எட்டயபுரம் சாலை, புதுசாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, கதிரேசன் கோயில் சாலை பகுதியில் 4 கடைகளில் வைக்கப்பட்டிருந்த டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், டயா்களை பறிமுதல் செய்து உரக்கிடங்குக்கு அனுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT