தூத்துக்குடி

சா்வதேச கராத்தே போட்டி: சாத்தான்குளம் மாணவா் தோ்வு

9th Nov 2019 08:15 AM

ADVERTISEMENT

மலேசியாவில் நடைபெறவுள்ள சா்வதேச கராத்தே போட்டிக்கு சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி மாணவா் தகுதி பெற்றுள்ளாா்.

சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவரான ஆரோன் ஜெபஸ், தேசிய அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கேற்று, மலேசியாவில் இம்மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சா்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.

எனினும், இவரது குடும்பம் ஏழ்மையில் உள்ளதால் விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கு அரசு மற்றும் சமூக ஆா்வலா்கள் உதவ வேண்டும் என சக மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT