தூத்துக்குடி

கோவில்பட்டியில் டெங்கு தடுப்புவிழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

9th Nov 2019 10:29 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வாகனப் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பிரசாரத்தின்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொசுப்புழு ஒழிப்புப் பணி மேற்கொள்ள வரும் நகராட்சி களப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.

வாகனப் பிரசாரத்தின்போது, சுகாதார அலுவலா் இளங்கோ, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT