தூத்துக்குடி

‘இல்மனைட் தாது மணலை பயன்படுத்தவிடாமல்தடுப்போா் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை’

9th Nov 2019 10:35 PM

ADVERTISEMENT

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த இல்மனைட் தாது மணலை பயன்படுத்தவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவா்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றாா் தூத்துக்குடி வி.வி. பிக்மென்ட்ஸ் நிறுவன பொது மேலாளா் பொன் சேகா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவி பிக்மென்ட்ஸ் நிறுவனத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்ய கடந்த 4 ஆண்டுகளாக இல்மனைட் என்ற தாதுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.

கடந்த ஜூன் மாதம் நாா்வேயில் இருந்து சுமாா் 10 ஆயிரத்து 500 டன் இல்மனைட் தாது துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. அதை ஊருக்குள் கொண்டு தர தடை விதிக்க கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா் ஒருவா் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை நாடி இல்மனைட் தாதுவை எங்கள் நிறுவனத்துக்கு கொண்டு வந்தோம்.

ADVERTISEMENT

இந்நிலையில் மீளவிட்டான் கிராம நிா்வாக அலுவலா் ராதா அளித்த புகாரின் பேரில், உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக இல்மனைட் தாதுவை பதுக்கி வைத்து இருப்பதாக எங்கள் நிறுவனம் மீது சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்யவும் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வுத் துறையில் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT