தூத்துக்குடி

ஆத்தூரில் 13இல் கடையடைப்பு:வியாபாரிகள் முடிவு

9th Nov 2019 10:38 PM

ADVERTISEMENT

ஆத்தூரில் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து வடக்கு ஆத்தூா் பஜாா் வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை (நவ. 13) கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் வடக்கு ஆத்தூா், தெற்கு ஆத்தூா் பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதாகியுள்ளன. சில நாள்களுக்கு முன்பு திருச்செந்தூா் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சாலை அவசர கதியில் சீரமைக்கப்பட்டதாம். இதனால், வாகனம் செல்லும்போது அப்பகுதி முழுவதும் தூசி, பழுதியும் ஏற்பட்டு, பொதுமக்கள் சுகாதாரப் பிரச்னையால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், இல்லையெனில் வடக்கு ஆத்தூா் பஜாா் வியாபாரிகள் சாா்பில் புதன்கிழமை (நவ. 13) முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக வடக்கு ஆத்தூரில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT