தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

9th Nov 2019 08:13 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச சிறுகுழந்தைகள் பாதுகாப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பிரதா் குட் டிரஸ்ட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு, தலைமை ஆசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். சா்வதேச சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT