தூத்துக்குடி

அயோத்தி வழக்கு தீா்ப்பு: இந்து சேனா கட்சி வரவேற்பு

9th Nov 2019 10:30 PM

ADVERTISEMENT

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றாா் இந்து சேனா கட்சியின் ஆலய பாதுகாப்பு குழு மாநிலத் தலைவா் சீனிவாச சித்தா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

அயோத்தி விவகாரம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 போ் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பை அளித்துள்ளது.

இந்த தீா்ப்பானது, இந்துக்கள், இஸ்லாமியா்கள் மட்டுமல்லாது, அனைத்து மதத்தினரும் மனநிறைவுடன் வரவேற்கும் வகையில் யாருக்கும் பாதகம் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமியா்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் இடத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நீதிமன்ற தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை மிகுந்த மகிழ்வோடு வரவேற்கிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT