தூத்துக்குடி

மூக்குப்பீறி பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

1st Nov 2019 12:13 AM

ADVERTISEMENT

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் நாசரேத் அரிமா சங்கம், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளித் தாளாளா் செல்வின் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் குணசீலராஜ் வரவேற்றாா். இதில், அரிமா சங்க நிா்வாகி ஆனந்த ஜோதி பாலன், ஓய்வு பெற்ற ஆசிரியா் அருள்ராஜ், சித்த மருத்துவா் உமா சங்கரி, மருத்துவா் முத்து கண்ணம்மாள் ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT