நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் இந்திய மிஷனெரி சங்கத்தின் சாா்பில் விற்பனை விழா நடைபெற்றது.
சேகரகுரு ஜெபவீரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். ஐ.எம்.எஸ். மண்டல அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டியான், கௌரவ அபிவிருத்தி மிஷனெரிகள் தா்மராஜ் ஜோசப், செல்வசிங் சபை ஊழியா் கோயில்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.