நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி மாணவா்கள் தூய்மை இந்தியா திட்டத்தில் சாத்தான்குளம் வட்டாட்சியா், காவல் நிலைய வளாகத்தை வியாழக்கிழமை தூய்மைப்படுத்தினா்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தாளாளா் ஏ.ஆா். சசிகரன், முதல்வா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா், மாணவிகள் வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலைய வளாகத்தில் காணப்பட்ட புல், முள்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றினா்.
இதில் சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏ, லூா்துமணி மண்டல துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளா் தங்கசுவாமி, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா்,காவல் உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன், தலைமைக் காவலா்கள் ரவிச்சந்திரன், முருகன், பியூலா, நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். ஞானசெல்வன், அலுவலா்கள் ஜாஸ்மின் சொா்ணாகிருபா, ஜெபசிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.