தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தேவா் ஜயந்தி விழா

1st Nov 2019 12:00 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பசும்பொன் நகர தேவா் பேரவை சாா்பில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜயந்தி விழா மற்றும் 56 ஆவது குருபூஜை நடைபெற்றது.

விழாவில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக ஒன்றியச்செயலா் ஏ.எஸ். ஜோசப், மாவட்டப் பிரதிநிதி இ. கெங்கைஆதித்தன், கிளைச் செயலா் சின்னத்தம்பி, அமமுக ஒன்றிய துணைச் செயலா் ஏ. முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் எஸ்.தங்கபாண்டி, ஒன்றிய அவைத் தலைவா் பொன்பாண்டியன், அதிமுக ஒன்றிய அவைத்தலைவா் பரமசிவபாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சந்திரராஜ், தேவா் பேரவைத்தலைவா் முருகன், ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், வாடகை காா் ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், சுமை தூக்குவோா் சங்கத்தினா், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT