தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்

29th Jun 2019 07:23 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து, வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மாணவரணி துணைச்செயலர் ஷெரீப் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜான் அலெக்ஸ்சாண்டர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மசோதா நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், திமுக மாநகரச் செயலர் ஆனந்த சேகரன், மாணவரணி நிர்வாகிகள் சுரேஷ்குமார், பால்மாரி, சோமநாதன், முத்துதுரை, பாலகுருசாமி, சங்கர், தாமோதர கண்ணன், செல்வமணிகண்டன், ரூபராஜா உள்பட பலர் 
கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT