தூத்துக்குடி

மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வு குறித்து கடிதம் அனுப்பும் பணி தொடக்கம்

31st Jul 2019 07:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மக்களுக்கு கடிதம் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டு கடிதம் அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ஆணையர் வீ.ப. ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மழைத்துளி மட்டும் மண்ணில் விழாமல் போனால் புல் கூட முளைப்பது கடினம் என்ற திருக்குறளை எடுத்துக்காட்டி ஒரு லட்சத்து  50 ஆயிரம் கடிதம் மக்களுக்கு அனுப்பப்படுகிறது.  மழை நீர் சேமிப்பு மிகவும்  அவசியம் என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேமிப்பு அவசியம். இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT