கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு பால் வியாபாரி உயிரிழந்தார்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், நல்லி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் பால் வியாபாரி காளிதாஸ்(32) என்பது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.