ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே எஸ். குமாரபுரத்தில் மானாவாரி வேளாண்மை குறித்து விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன், வேளாண் அலுவலர் சுனில் கெளசிக், உதவி வேளாண் அலுவலர் சங்கரேஸ்வரி, உதவி விதை அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் பேசினர். எஸ். குமாரபுரம் விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மக்காச்சோள படைப்புழு மேலாண்மை, அரசு மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், உணவு தானிய இயக்கம், பயிர்களில் உற்பத்தியை பெருக்குதல், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள், நீடித்த நிலையான மானாவாரி வேளாண் திட்டம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா உதவி மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.