நாசரேத் கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான "புத்தக வாசிப்பு இயக்கம் 2022 ' நடைபெற்றது.
கிளை நூலகர் பொன்ராதா தலைமை வகித்து புத்தகம், நாளிதழ் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினார். இதையடுத்து, பள்ளி மாணவர், மாணவிகளுக்கான புத்தக வாசிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நாசரேத் நைட்டிங்கேல் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்று புத்தகம் மற்றும் நாளிதழ்களை வாசித்தனர். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் மார்க் ஜான், நிர்வாகி பேரின்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.