தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் 31இல் சிறப்பு குறைதீர் முகாம்

29th Jul 2019 07:02 AM

ADVERTISEMENT

ஸ்ரீவைகுண்டத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் வரும் 31 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, ஸ்ரீவைகுண்டம்  வட்டாட்சியர்  சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீவைகுண்டம்  வட்டத்தில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் சிறப்பு குறை தீர் முகாம்  புதன்கிழமை (ஜூலை 31) காலை 10 மணிக்கு  உதவி ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் கலோன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு குறை தீர் நாள் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT