தூத்துக்குடி

பசுவந்தனை அருகே  ரூ.43 லட்சத்தில்  குடிமராமத்துப் பணிகள்

29th Jul 2019 07:07 AM

ADVERTISEMENT

பசுவந்தனை அருகே ரூ. 43 லட்சம் மதிப்பில் பெரியகுளத்தில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பசுவந்தனை அடுத்துள்ள பொம்மையாபுரம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  குடிமராமத்து பணியின் கீழ் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வார அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அப்பகுதியின் நீர்ப்பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்களிப்புடன் தூர் வாரும் பணிகளை கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா தொடங்கிவைத்தார். ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, துணை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT