தூத்துக்குடி

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மின்னியல் துறை கூட்டமைப்பு விழா

29th Jul 2019 07:07 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மின்னியல்- மின்னணுவியல் துறையின் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. 
இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல் தலைமை வகித்தார். சென்னை ஏஇக நிறுவனத்தின் திட்டப் பணி மேலாளர் பாரதிராஜா ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மாணவி வவுணியா மின்னியல் துறை குறித்துப் பேசினார். கூட்டமைப்பு மாணவச் செயலர் அமர்நாத் வரவேற்றார். மாணவி சிந்துஜா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவர் ஹரிஹரன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை, துறைத் தலைவர் வில்ஜூஸ் இருதயராஜன் தலைமையில், துணைப் பேராசிரியர்கள் சங்கரகுமார், அன்டனி ஜெபிரி வாஸ், சண்முக நித்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT