தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

29th Jul 2019 07:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவையொட்டி அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. 
பனிமய மாதா பேராலயத் திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் அரசின் சாதனைகளை கண்டு களிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் தமிழக அரசு செயல்படுத்தும் நலத்  திட்டப்பணிகள், அரசின் பல்வகைத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மக்கள் தொடர்பு அலுவலர் வெ. சீனிவாசன், வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சையத் முஹம்மத், ரா. ராமசுப்பிரமணியன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT