தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

29th Jul 2019 06:57 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க சாத்தான்குளம் வட்டக் கிளையின்  செயற்குழுக் கூட்டம்  சனிக்கிழமை  நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு சாத்தான்குளம் வட்டத் தலைவர் தேவசமாதானம் தலைமை வகித்தார். வட்டச் செயலர் முருகானந்தம், மாவட்ட இணைச் செயலர் கு. ஜெயபால் உள்ளிட்டோர் பேசினார். 
தூத்துக்குடியில் நடைபெறும் மாவட்ட  மாநாடு, சேலத்தில் வரும் செப்டம்பர்  மாதம் நடைபெறும் மாநில மாநாடுகளில் திரளாக கலந்து கொள்வது; ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை  ஜூலை மாதம் நடைபெறும்  நேர்காணலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கலந்து  கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதில், அமைப்பின் நிர்வாகிகள் நடராஜன், இஸ்ரவேல், நாராயணன், பாப்புராஜ், அர்ச்சுணன், சுடலைக்கண், குமரகுருபரன், மேரிபாப்பா, செல்லதங்கம், பச்சமால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT