தூத்துக்குடி

கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றக் கூட்டம்

29th Jul 2019 07:02 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, ஸ்ரீகரா வித்யா மந்தீர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக இயக்குநர் பா.டென்சிங் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஓய்வுபெற்ற மண்டல இணை இயக்குநர் சீ.கெங்காராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சுந்தரஆவுடையப்பன் பங்கேற்று, "மகிழ்ச்சியே வாழ்க்கை' எனும் தலைப்பில் பேசினார். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர், மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், அமைப்பின் இயக்குநர்கள் காளிதாஸ், ஜான்கணேஷ், காப்பாளர் செல்வின், ஆலோசகர் ஹரிகிருஷ்ணன், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி பேராசிரியர் மகேஷ்குமார், ரோட்டரி சங்கச் செயலர் முத்துமுருகன், உரத்த சிந்தனை வாசகர் வட்டத் தலைவர் சிவானந்தம், பி.எஸ்.என்.எல். உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணன், மதுரை வானொலி நிலைய அலுவலர் சாய்சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மன்றக் காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார்.  காப்பாளர் சேர்மத்துரை வரவேற்றார். மோகன்ராஜ் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT