தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாயைச் சீரமைக்க வலியுறுத்தல்

29th Jul 2019 06:58 AM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாயைச் சீரமைத்து சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் தலைவர் ஆ. ரத்தினசாமி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
   ஓட்டப்பிடாரத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயைச் சீரமைத்து, அதை நீர்த்தேக்கமாக மாற்ற வேண்டும். கண்மாயின் மழைநீர் வரத்து ஓடைகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும். கண்மாய்க்கரை ஓரம்  வடக்குப் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் சுற்றளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  கண்மாயின் அருகிலுள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் பன்றிகள் வளர்த்து வருவதை தடை செய்து, அதனை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT