தூத்துக்குடி

ஆத்தூரில் பாமக பொதுக்கூட்டம்

29th Jul 2019 07:04 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முத்துவிழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை  நடைபெற்றது.
அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80 ஆவது பிறந்த நாள் முத்துவிழா பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  மத்திய மாவட்டச் செயலர் மு.சின்னத்துரை, தெற்கு மாவட்டத் தலைவர் செந்தூர் சிவபெருமாள், மாநில துணைஅமைப்புச்செயலர் வள்ளிநாயகம், மாநில இளம்பெண்கள்அணி துணைச் செயலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், சமூக முன்னேற்றச் சங்க தலைமை நிர்வாகக்குழு தலைவர் இரா.ராஜபரந்தாமன், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் திருமலைகுமாரசாமி, நெல்லை மாவட்டச்செயலர் சியோன் தங்கராஜ், மாவட்ட துணைச்செயலர் இசக்கி பாண்டியன், இளைஞரணிச்செயலர் ரமேஷ், ஆழ்வை ஒன்றியச்செயலர் பாபுதேவேந்திரன், ஆத்தூர் நகரச்செயலர் பாலன்,  உமரி நெப்போலிலியன், சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தெற்கு மாவட்டச் செயலர் இரா.பரமகுரு வரவேற்றார். கோவில்பட்டி நகரச்செயலர் கருப்பசாமி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT