ஆடி வெள்ளி முன்னிட்டு , ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் துர்க்கை அம்மன் தலத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.