தூத்துக்குடி

விஸ்வகர்மா ஐக்கிய சங்கம் கொண்டாட்டம்

22nd Jul 2019 07:42 AM

ADVERTISEMENT

தியாகராஜ பாகவவதருக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்ததை அடுத்து திருச்செந்தூரில் விஸ்வகர்மா ஐக்கிய சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.  
இதையடுத்து, திருச்செந்தூரில் விஸ்வகர்மா ஐக்கிய சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சங்க துணைத் தலைவர் ஐ. மகராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் எ.முருகன், துணைச்செயலர் எஸ்.நாராயணன், நிருவாகக்குழு உறுப்பினர்கள் செந்தில்ஆறுமுகம், வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அமைப்பின் செயலர் இ. சங்கரசுப்பு இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள் வி.கே.ராமஜெயம், ரவிமுத்து, ராஜகோபால், என். முத்துலெட்சுமணன், பி. மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT