தூத்துக்குடி

பத்ரகாளியம்மன் கோயிலிலில் ஆடித் திருவிழா நாளை தொடக்கம்

22nd Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

குரும்பூர் அருகே பாட்டக்கரை அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) ஆடித் திருவிழா தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆடித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் ஆக. 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு 100 8 மா விளக்கு பூஜை, 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு 108 பால்குடம், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீபத்ரகாளிஅம்மன், பிரத்தியங்கரா தேவி, வாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள், மாலை 6 மணிக்கு 208 பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
ஆக. 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆடிப்பூரம் சிறப்பு பூஜை, சுமங்கலிலி பூஜை,  6 ஆம் தேதி அம்மனுக்கு பதனீர் கஞ்சி படையல், சிறப்பு பூஜை, 13 ஆம் தேதி பொங்கலிலிடுதல், கூழ் வார்த்தல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT