தூத்துக்குடி

தென்னிந்திய புறா பந்தயம்:  சாம்பியன் பட்டம் பெற்றவருக்கு கார் பரிசளிப்பு

22nd Jul 2019 07:38 AM

ADVERTISEMENT

தென்னிந்திய புறா பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற புறா உரிமையாளருக்கு கார் பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டி சார்பில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான புறா பந்தயப் போட்டிகள் 3  
கட்டங்களாக நடைபெற்றன. இதில் 500 கி.மீ. தொலைவு போட்டி திருவள்ளூர் மாவட்டத்திலும், 750  கி.மீ. தொலைவு போட்டி ஆந்திர மாநிலம் சிங்கராயகுண்டாவிலும், 1000 கி.மீ. தொலைவு போட்டி தெலங்கானா மாநிலத்திலும் நடைபெற்றன. இதில், 300 க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன. 
500 கி.மீ. பந்தயத்தில் 7.7  மணி நேரத்தில் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செய்யதுஅகமதுஇப்ராஹிம் என்பவரது புறாவும், 750 கி.மீ. பந்தயத்தில் 15.45 மணி நேரத்தில் செய்யதுஅகமதுஇப்ராஹிம் என்பவரது புறாவும் முதலிடம் பெற்றன.
1000 கி.மீ. பந்தயத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையைச் சேர்ந்த சாமித்துரை என்பவரின் புறா 24.43 மணி நேரத்தில் முதலிடமும், செய்யதுஅகமதுஇப்ராஹிம் என்பவரின் புறா 2 ஆம் இடமும் பெற்றன.  வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கான பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. 
சவுத் இந்தியன் ரேசிங் பீஜியன் சொசைட்டி நிறுவனர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். போபால்  டி.ஐ.ஜி.  அஜய் பரதன் பங்கேற்றார். விழாவில், புறா பந்தயப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற செய்யதுஅகமது இப்ராஹிமுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 
ஏற்பாடுகளை கோவில்பட்டி ரேசிங் கிளப் நிர்வாகிகள் சாமித்துரை, செந்தில், பூமிநாதன், செல்வம், ராஜா, சார்லி, விஜய் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT