தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கலைஞர்களுக்கு விருது

22nd Jul 2019 07:40 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றத்தின் மூலம்  2018-19 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் விருதுகள் வழங்க  5 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கலை இளமணி விருதுக்கு ஹார்மோனிய கலைஞர் சீ. ஸ்ரீராம், கலை வளர்மணி விருதுக்கு நாட்டுப்புறக் கலைஞர் வீ. சக்திகுமார், கலைச்சுடர்மணி விருதுக்கு பரதநாட்டிய கலைஞர் க. நவீதா, கலைநன்மணி விருதுக்கு ஓவிய கலைஞர் எஸ். மோகன்குமார், கலை முதுமணி விருதுக்கு மிருதங்க கலைஞர் ப. ராஜகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுகள், பட்டயம் மற்றும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT