தூத்துக்குடி

தூத்துக்குடியில் நிதிநிலை அறிக்கை  விளக்க கலந்துரையாடல் கூட்டம்

22nd Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இந்திய வியாபார தொழில் சங்கம் சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, சங்கச் செயலர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் பொன் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் லட்சுமணன் பங்கேற்று, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்துப் பேசினார். 
இதைத்தொடர்ந்து, வரி விதிப்பு குறித்து கலந்துரையாடல், வரி விதிப்பின் சதவீத மாற்றம் குறித்து விளக்கப் படம் ஒளிபரப்பப் பட்டது. இதில், அமைப்பின் நிர்வாகிகள், வர்த்தக அமைப்பினர், வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT