தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ரூ. 72.10 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள்

22nd Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் வட்டத்தில் ரூ. 72.10 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை ஞாயிற்றுக்கிழமை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.  
சாத்தான்குளம் பகுதியில் 12 கண்மாய்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாத்தான்குளம் வட்டத்தில் ரூ. 29.60 லட்சம் மதிப்பில்  உடையார்குளம், ரூ. 42.50 லட்சம் மதிப்பில் அமுதுண்ணாக்குடிகுளம் ஆகிய குளங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணியை திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா பார்வையிட்டார். அப்போது, சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுவாமிநாதன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ்குமார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்முருகன், விவசாயிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT