தூத்துக்குடி

இணையதள மருந்து வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தல்

22nd Jul 2019 07:36 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் இணையதள மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். பொதுச்செயலரும், அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கப் பொருளாளருமான செல்வன், மாநில பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
தீர்மானங்கள்: இணையதள மருந்து வணிகத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்; மக்கள் நலன்கருதி நாடு முழுவதும் மருந்து பொருள்களுக்கு 5 சதவீதம் சரக்கு, சேவை வரியை அமல்படுத்த வேண்டும்; திருச்சியில் அமைப்பின் மாநில சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது; இணையதள மருந்து வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடத்துவது; இணையதள மருந்து வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் வகையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை சந்தித்து மனு அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT