தூத்துக்குடி

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நாளை மின் தடை

19th Jul 2019 12:49 AM

ADVERTISEMENT


தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1, 2ஆம் ரயில்வே கேட்டுகள்,  மட்டக்கடை, கடற்கரை சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தெப்பக்குளம், சிவன்கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர்,  சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஓட்டப்பிடாரம் பகுதி: ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றார் அவர்.
உடன்குடி, கடம்பூர் பகுதியில்...
 உடன்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறவிருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 20) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
மாதாந்திர  மின் பராமரிப்பு பணிகள் காரணமாக  உடன்குடி துணை மின் நிலையத்தைச் சார்ந்த  உடன்குடி,  தைக்காவூர்,  சீர்காட்சி,  பிச்சிவிளை,  செட்டியாபத்து,  ஞானியார்குடியிருப்பு,  தாண்டவன்காடு,  தண்டுபத்து,  வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி,  கொட்டங்காடு,  மாதவன்குறிச்சி,  குலசேகரன்பட்டினம்,  மணப்பாடு,  மெய்யூர்,   பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம்,  அன்பின்நகரம் ஆகிய ஊர்களுக்கு சனிக்கிழமை  காலை 9  மணி முதல் பிற்பகல் 1 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
    கடம்பூர்:   கடம்பூர் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுவேலைகள் மற்றும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் கடம்பூர் மின் விநியோகத்திற்கு உள்ள கடம்பூர், சிவலிங்கபுரம், ஓணமாகுளம், இளவேளங்கால், வி.பி.தாழையூத்து, பன்னீர்குளம், வடக்குமயிலோடை, தெற்கு மயிலோடை, நொச்சுகுளம், திருமலாபுரம், பரம்புக்கோட்டை மற்றும் கயத்தாறு மின் விநியோகத்திற்கு உள்பட்ட கரிசல்குளம், அகிலாண்டபுரம், சத்திரப்பட்டி, ஆவுடையாபுரம், காப்புலிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT