திருச்செந்தூர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள ராணிமகாராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கப்பூ மகன் சுரேஷ்(48) . இவரது மனைவி செல்வகனி(44). தம்பதியின் மகன்கள் இருவரும் சென்னையில் வேலைபார்த்து வருகின்றனர். மது அருந்துபவரான சுரேஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் செல்வகனிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.