விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வலியிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம், தினசரி சந்தை பகுதி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகள், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் புவிராஜ், ஜோதி, சுரேஷ்பாண்டி, ராமலிங்கம், பாலமுருகன், யோவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.