மகளிருக்கான மூத்தோர் தடகள போட்டியில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் 3 ஆம் இடம் பெற்றுள்ளார்.
மகளிருக்கான தேசிய மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் நடைபெற்றது. இதில், மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மெர்சி பத்மாவதி, 60 வயது பிரிவில் உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மெர்சி பத்மாவதியை, கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார், தாளாளர் ராஜரத்தினம், முதல்வர் டோரா அருள் செல்வி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டினர்.