தூத்துக்குடியில் திங்கள்கிழமை மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட்நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அருண்குமார் (19). இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். தன்னுடன் படிக்கும் முத்தையாபுரம் அய்யன் கோயில்தெருவைச் சேர்ந்த சக்கையா மகன் கற்பகவேலனுடன் (18) மோட்டார் சைக்கிளில் அருண்குமார் திங்கள்கிழமை கல்லூரிக்கு சென்றுள்ளார். இருவரும் பிற்பகல் ஒரு மணியளவில் வீட்டுக்குத் திரும்பினராம். பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் சென்ற மினி லாரியும் மோதின. இதில் அருண்குமார், கற்பகவேலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.