காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "புதுமைப்படைப்புகள்'' என்னும் தலைப்பில்பயிற்சி பட்டறை திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறைக்கு கல்லூரி நிறுவனர்- தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். செயலர் வாவு எம்.எம். மொகுதஸீம் , துணைச்செயலர் ஹாபிஸ் வாவு எஸ்.ஏ.ஆர். அஹமது இஸ்ஹாக்) மற்றும் இயக்குநர் மெர்சி ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவி எம்.டி. ஜொஹரா நஃபீலா கிராத் ஓதி தொடங்கி வைத்தார். முதல்வர் ரா.செ. வாசுகி, மன்றச் செயலர் எம். இந்துமதி ஆகியோர் பேசினர்.
இஸ்லாமிய வாழ்க்கை பயிற்சி இணையதள பல்கலைகழக நிறுவனர் உம் அஃராஜ் முகம்மது "புதுமைப் படைப்புகள்' என்ற தலைப்பில் பேசினார். துறைத் தலைவர் எஸ். கிருஷ்ணவேணி வரவேற்றார். மூன்றாம் ஆண்டு மாணவி இ. மெர்ஸி அபிதா நன்றி கூறினார். இதில், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.